Breaking News

ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு online apply haj 2025

அட்மின் மீடியா
0

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு

புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 23ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை செப்.23 வரை நீட்டித்துள்ளது. 

ஆன்லைன் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 23.09.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 15.01.2026 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.

கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)ஐ தொடர்பு கொள்ளலாம்.

இன் ஷா அல்லாஹ் 2025 ம் ஆண்டு இந்திய ஹஜ் குழு மூலமாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழு இணையதளம் hajcommittee.gov.in மற்றும் மொபைல்  செயலி HAJ SUVIDHA வழியாகவும் ஆன்லைனில்  சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.9-2024
 

ஹஜ் 2025-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை நிற பின்னனியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 

தேவையான ஆவணம்:-

குறைந்தபட்சம் 15-1-2026 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத் தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.  இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், 

வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம். 

உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் 

மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.

ஹஜ் பாலிசி 2025

1. இந்திய ஹஜ் குழு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு...

ஒவ்வொரு வருடமும், இந்தியா மற்றும் சவுதி அரசும் இணைந்து ஹஜ் திட்ட வரைவுகள் குறித்து இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதனடிப்படையில் இந்தியாவுக்காக ஒதுக்கப்படும் ஹஜ் யாத்ரீகர்களின் மொத்த எண்ணிக்கையில் (Total Quota) இந்த வருடம் இந்திய ஹஜ் குழுவிற்கு 70% சதவீதமும் தனியாருக்கு (HGO) 30% சதவீதமும் பிரித்து வழங்கப்படும்.

2. இந்திய ஹஜ் குழு மூலமாக வாழ்க்கையில் ஒரு முறை தான் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும், ஹ அத்துல்

ஹஜ் பயணம் என்பது கடினமான தட்பவெப்ப சூழ்நிலையில் விடா முயற்சியோடு நீண்ட வெகுதூர நடை பயணம் செய்து நிறைவேற்ற வேண்டிய யாத்திரை என்பதால் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் யாத்ரீகர்கள் தகுந்த துணையோடு பயணிக்க வேண்டியது கட்டாயமாகும் (MANDATORY).

ஒருவேளை 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் /பெண் யாத்ரீகர்களுக்கு தகுந்த துணை இல்லாது போனால் ஏற்கனவே ஹஜ் கமிட்டி மூலமாக பயணித்தவர் இவர்களுக்கு துணையாக மீண்டும் (Repeater) செல்லலாம். இவர்களின் விமான டிக்கட்டில் நிர்ணயிக்கப்படும் கூடுதல் தொகையை செலுத்த வேண்டும்.

அவ்வாறு 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் பயணிக்கு 18 முதல் 60 வயது வரை உள்ள ஆண்/பெண் பயணி ஒருவர் துணையாக செல்லலாம். ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிக்கு 45 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண் மட்டுமே துணையாக செல்ல முடியும்.

மேற்கண்ட ரிப்பீட்டர் வசதியை பயன்படுத்தி கொள்ளும் பயணிகள் இதற்கான உறுதி மொழி சான்று வழங்க வேண்டும்

3. ஹஜ் சுவீதா செயலி....

ஹஜ் 2024ம் ஆண்டு கால கட்டத்தில் இந்த ஹஜ் சுவீதா செயலியானது தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் மூலமாக தங்குமிடம் /விமானம்/ பயண சுமைகள்/ அவசர உதவிகள்/குறைகள்/பரிகாரங்கள்/, ஹஜ் பயணிகள் வசதிகள் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது.

அனைத்து யாத்ரீகர்களும் ஹஜ் சுவீதா செயலியின் பயன்பாடு பற்றி தெளிவாக புரிந்து

கொண்டு செயல்பட அவ்வப்போது தேவையான தகவல்களை இந்திய ஹஜ் குழு வழங்கும்.

4.ஹஜ் விண்ணப்ப படிவம். (HAF)

புனித ஹஜ் விண்ணப்பங்களை hajcommittee.gov.in என்ற இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளம் அல்லது மொபைல் ஃபோன் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்.

5. ஹஜ் மேற்கொள்ள தேவையான தகுதி...

சவுதி அரசு வழிகாட்டுதல்படி ஹஜ் செய்யும் யாத்ரீகர் பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம், நன்னடத்தைகள், மற்றும்தெளிவான மனநிலை உடையோராக இருக்க வேண்டும்.

இது போன்ற முஸ்லிம் இந்திய பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதை தவிர கீழ்கண்ட நிலை உடையோர் விண்ணப்பிக்க இயலாது.

1. இயந்திர பதிவு வகையான (15-01-2026 வரை செல்ல தக்க) இந்திய பன்னாட்டு பாஸ்போர்ட் இல்லாதவர்கள்...

2. மெஹ்ரம் வகையில் அனுமதிக்கப்பட்ட தவிர மீண்டும் ஹஜ் செய்ய (ரிப்பீட்டர்) துணையாக செல்வோர்...

3. விண்ணப்பதாரர் தவறான தகவல் கொடுத்திருந்தால் அத்தகையோர் ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்கப்படமாட்டார். எந்த நேரத்திலும்,(விமானத்தில் ஏறியிருந்தாலும்) அவரது பயணம் தடை செய்யப்பட்டு கீழிறக்கப்படுவார். மேலும் அவர் செலுத்திய ஹஜ் கட்டணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிமுறை அனுமதிக்ப்படாத வகையில் மீண்டும் ஹஜ் செய்வோருக்கும் பொருந்தும். (பத்லி ஹஜ்ஜாக இருந்தாலும் சரியே) லி

4. மருத்துவ ரீதியாக, முனைய புற்றுநோய், மேம்பட்ட இதயநோய், சுவாச கோளாறு, கல்லீரல், சிறுநீரகம், காசநோய் மற்றும் முதுமை காரணமாக நினைவாற்றல் தளர்ச்சி உடையோர்......

5. துணையில்லாத பெண்கள், மேம்பட்ட நிலை கர்ப்பவதிகள்... (பன்னாட்டு விமான விதிமுறைபடி

6. வெளிநாடு செல்ல நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டவர்கள்....

7. பெற்றோர் அல்லது பாதுகாலர் ஒப்புதல் பெறாத 18 வயதுக்கு கீழுள்ள விண்ணப்பதாரர்...

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback