Breaking News

ஹஜ், உம்ரா புனித யாத்திரை அனுப்புவதாக மோசடி காரைக்காலில் சஹாரா டிராவல்ஸ் உரிமையாளர் கைது முழு விவரம் Owner of Sahara Travels arrested in Karaikal

அட்மின் மீடியா
0

ஹஜ், உம்ரா புனித யாத்திரை அனுப்புவதாக மோசடிடிராவல்ஸ் உரிமையாளர் கைது முழு விவரம் Owner of Sahara Travels arrested in Karaikal for sending Hajj and Umrah Pilgrimage

 


காரைக்காலில் ஹஜ் பயணம் அனுப்புவதாக கூறி ரூ.25 லட்சம் பணம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் நைனா முகம்மதை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலில் இயங்கி வரும்  சஹாரா டிராவல்ஸ் உரிமையாளர் நைனா முகமது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகின்றார், அதில் குறைந்த விலையில் ஹஜ் , உம்ரா, யாத்திரை அழைத்து செல்வதாக கூறி காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்தோா், ஹஜ் பயணம் செல்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக பணம் செலுத்தியுள்ளனா். 

ஆனால், பயண ஏற்பாடுகளை செய்யாமல் நிறுவனம் ஏமாற்றுவதாகக் கூறி, தாங்கள் செலுத்திய பணத்தை மீட்பதற்காக அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஹஜ் - உம்ரா பண மோசடி மீட்புக் குழுவை தொடங்கி காரைக்கால் நகர காவல்நிலையத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தார்கள் அந்த புகாரை பெற்ற போலீசார் விசாரனை செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் 

மேலும் நைனா முகம்மதை தேடி வந்த நிலையில் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்

ஹஜ் - உம்ரா பண மோசடி மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் அ. ராஜா முகம்மது கூறுகையில்

காரைக்காலைச் சோ்ந்த டிராவல்ஸ் நிறுவனம் கடந்த 2019 -ஆம் ஆண்டு முதல் ஹஜ் பயணம் அனுப்பிவைப்பதாக பலரிடம் பணம் வசூலித்துள்ளது. 

விண்ணப்பதாரா்களிடம் பாஸ்போா்ட் வாங்கிக்கொண்டு, ஹஜ் பயணத்துக்கு அனுப்பிவைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களைச் சோ்ந்தோா் ஒருங்கிணைந்து, பணத்தையும், பாஸ்போட்டையும் மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி கூட்டத்துக்குப் பின் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது என்றார்.

Tags: இந்திய செய்திகள் புதுச்சேரி செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback