Breaking News

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி முழு விவரம் Police permit to actor Vijay's Tamil Nadu Victory Kazhagam conference

அட்மின் மீடியா
0

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி Police permit to actor Vijay's Tamil Nadu Victory Kazhagam conference


  • விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த போலீசார் அனுமதி 

  • தவெக சார்பில் காவல்துறையின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்பட்ட நிலையில் செப்.23ம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது



நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி நடத்தும் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் 

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி என்ற பகுதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில் அதற்காக அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த காவல்துறையினர் 21 கேள்விகள் கேட்டதாகவும் அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த விளக்கத்தை காவல்துறையினர் ஏற்றுக் கொண்டதாகவும் சற்றுமுன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback