Breaking News

கண்ணாடி வேண்டாம் சொட்டு மருந்து போதும் என அறிமுகம் ஆன மருந்துக்கு தடை முழு விவரம் presvu new eye drops

அட்மின் மீடியா
0
படிக்க கண்ணாடி வேண்டாம் சொட்டுமருந்து போதும் என அறிமுகம் ஆன மருந்துக்கு இந்தியாவில் திடீர் அனுமதி ரத்து! presvu new eye drops

இந்தியாவில், கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'என்டோட் பார்மசூட்டிகல்ஸ்' என்ற மருந்து நிறுவனம், 'பிரஸ் வியூ' என்ற கண் சொட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த கண் சொட்டு மருந்துக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது

New Eye Drops Offer an Alternative to Reading Glasses


அந்த மருந்து பிரஸ்பயோபியா:-பாதிப்பு இருப்போருக்கு அருகே உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது. புத்தகங்களைப் படிக்கச் சிரமப்படுவார்கள். தற்போது இந்த பிரச்னைக்கு, ஒரு கண் சொட்டு மருந்து வாயிலாக தீர்வு கிடைக்க உள்ளது. இந்த கண் சொட்டு மருந்து கண்ணாடிகளின் தேவையை நீக்குவது மட்டுமின்றி, கண்கள் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்கிறது.

கண் பார்வையை மேம்படுத்தும் என்றும், படிப்பதற்காக மட்டுமே அணியும் ரீடிங் கிளாஸ் எனப்படும் கண்ணாடிகள் இனி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்திருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 'பிரெஸ்வு' (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைக் கூறி விளம்பரம் செய்வது, மருந்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback