Breaking News

இஸ்ரேல் தலைநகரில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் முழு விவரம் protest against Prime Minister Netanyahu in Israel's capital

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் தலைநகரில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக லட்சகணக்கான மக்கள் போராட்டம் முழு விவரம்  protest against Prime Minister Netanyahu in Israel's capital

 


காஸாவில் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் 6 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இஸ்ரேலின் தொழிலாளர் அமைப்பான Histadrut நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. திங்களன்று உள்ளூர் நேரப்படி பகல் 6 மணியில் இருந்து வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றே Histadrut அறிவித்துள்ளது.

காஸா போரில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளும் சண்டை நிறுத்த உடன்பாடு செய்துகொள்ள வலியுறுத்தி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர்

ஹமாஸின் பிடியில் உள்ள பிணையாளிகளை மீட்டுக்கொண்டு வர இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளர்.

இந்த போராட்டத்தில் பல்வேறு அரசு நிறுவன ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், உட்பட அனைத்துத் தரப்பினரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிணைக் கைதிகளை மீட்பதில் ஆர்வம் இல்லை என்றும் பாலஸ்தீன மக்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கையை மட்டும் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை முன்னெடுத்துள்ளார் பிணைக் கைதிகள் மீட்கப்பட்டால், போர் முடிவுக்கு வருமென குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback