கியூஆர் கோடு ஸ்காலர்ஷிப் மோசடி பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை QR Code Scholarship Scam
கியூஆர் கோடு ஸ்காலர்ஷிப் மோசடி பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
QR Code Scholarship Scam |
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருகிவரும் இணையதள மோசடியில் புதிதாக கியூ ஆர் கோடு ஸ்காலர்ஷிப் என்ற மோசடி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபர் உங்களுடைய பெயர் விவரங்களை கூறி மகன் அல்லது மகளுக்கு ஸ்காலர்ஷிப் வந்துள்ளது என்றும், அதை பெற்றுக்கொள்ள தாங்கள் அனுப்பும் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் போதும் என்றும் கூறி ஒரு க்யூ ஆர் கோடு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி கொடுப்பார்.
உண்மை என நம்பி, க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து யுபிஐ பின் விவரத்தை கொடுத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்த பணம் மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும். எனவே மேற்கண்ட மோசடி பற்றி பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மோசடி அழைப்புகள் மற்றும்
குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். மேலும், இது போன்ற மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு