Breaking News

நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை நடந்தது என்ன முழு விவரம் Rowdy Seizing Raja

அட்மின் மீடியா
0
நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை நடந்தது என்ன முழு விவரம் Rowdy Seizing Raja, who was arrested yesterday shot dead in the encounter

சீசிங் ராஜா சென்னை அழைத்து வந்த போது நீலாங்கரை அருகில் வைத்து தப்பி செல்ல முயன்றதாகவும் அப்போது போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்

Rowdy Seizing Raja
Rowdy Seizing Raja


பல்வேறு வழக்கில் தேடப்பட்டு வந்த  சீசிங் ராஜாவை தலைமறைவாக ஆந்திராவில் பதுங்கி இருந்த  அவரை நேற்று(22-09-2024) நள்ளிரவில் கைது செய்து சென்னை மாநகர போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வந்த போது நீலாங்கரை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.நீலாங்கரையில் உள்ள கேஎல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலி

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகள் இருப்பதாக போலீஸ் தகவல்; சீசிங் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு, 3ஆவது என்கவுன்ட்டர் நடந்துள்ளது 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ஆம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்

செப். 18ஆம் தேதி ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்;

இன்று ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்; 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback