பிராய்லர் கோழி போல் பிராய்லர் ஆடு என பரவும் வதந்தி முழு விவரம் Rumor has it that broiler goats
பிராய்லர் கோழி போல் பிராய்லர் ஆடு என பரவும் வதந்தி முழு விவரம் Rumor has it that broiler goats are like broiler chickens
தமிழ்நாட்டுக்கு வந்து விட்டது பிராய்லர் கோழி மாதிரி ஆபத்தான பிராய்லர் ஆடு அதிகம் நகர பகுதிகளில் தான் விற்கப்படுகின்றன
போயர் என்ற வகையைச் சார்ந்த, ஏழு மாதத்தில் 35 கிலோ வரை சதை பிடித்து வளரக்கூடிய அடுத்த பிராய்லர் வகை ஆடுகள் தமிழ்நாட்டில் விற்பனைக்குத் தயாராகி வருகின்றன என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
ஆடுகளில் பிராய்லர் என்ற வகையே கிடையாது. போயர் வகை ஆடுகள் தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை.
இந்த ஆடுகள் 6 மாதங்களில் 24 கிலோ எடை வரை வளரும். கலப்பின விருத்தி அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த வகை ஆடுகள் உற்பத்தியாகின்றன.
ஆனால் குறைவான அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆடுகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று எந்த அறிவியல்பூர்வ சான்றுகளும் இல்லை" என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விலங்கு உற்பத்தி ஆய்வு மைய இயக்குநர் விளக்கமளித்துள்ளார்
என தமிழக உண்மை சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது
Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி