Breaking News

ஊட்டியில் மதம் மாற மறுத்ததால் யாஷிகா சயனைட் கொடுத்து படுகொலை என பரவும் வதந்தி காவல்துறை வெளியிட்ட அறிக்கை Rumors spread that Yashika was killed by giving cyanide to Ooty because she refused to convert

அட்மின் மீடியா
0

ஊட்டியில் மதம் மாற மறுத்ததால் சோற்றில் சயனைட் விஷத்தை வைத்து படுகொலை என பரவும் வதந்தி #நீலகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

nilgiris district Police has issued a report on the rumor that there is a massacre by poisoning rice with cyanide because they refused to convert in Ooty.




பரவிய செய்தி:-

துலுக்க குடும்பத்தின் #லவ்ஜிகாத் சதியால் வீழ்த்தப்பட்ட #இந்துபெண்_யாஷிகா மதம் மாற மறுத்ததால் சோற்றில் #சயனைட் விஷத்தை வைத்து படுகொலை செய்த துலுக்க மாமியார்.! என்ன எழவெட்டுத்த மத கோட்ப்பாடோ.?

 
நீலகிரி மாவட்ட காவல்துறை வெளீயிட்டுள்ள செய்தி குறிப்பு:-

நீலகிரி மாவட்டம், உதகை நகர் மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காந்தல் பகுதியில் வசித்து வரும் நிலோப்பர் நிஷா வயது 48 க/பெ அப்துல் சமது என்பவர் கடந்த 23.06.2024 அன்று மாலை 07.00 மணிக்கு தனது மகள் ஆலஷிகா பர்வின் (22) க/பெ இம்ரான் கான் என்பவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் நகர் மேற்கு காவல்நிலையத்தில் குற்ற எண் 154/2024 U/s 174(III) CrPC  வழக்கு பதிவு செய்யபப்ட்டது

இறந்த ஆஷிகா பர்வீன் என்பவருக்கும் அவரது கணவர் இம்ரான் கானுக்கும் கடந்த 2021 ஆம் வருடம் திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 23.06.2024 அன்று ஆஷிகா பர்வீனின் மாமியாரான யாஸ்மீன் நிலோப்பர் நிஷாவிற்கு போன் செய்து ஆஷிகா பர்வின் வலிப்பு வந்து கீழே விழுந்ததால் அவரை BS மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியதின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். 

நிலோபர் நிஷா BS மருத்துவனைக்கு சென்ற போது அவரது மகள் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். கடந்த 20.08.2021 அன்று இவ்வழக்கு சம்மந்தமான இரசாயண பரிசோதனை அறிக்கை பெறப்பட்டு ஆஷிகா பர்வீனின் இறப்புக்கான காரணம் சயனைடு விஷத்தால் தான் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது பின்பு இது சம்மந்தமாக 3108.2024 அன்று ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான் கான், மாமியார் யாஸ்மீன் கணவரின் நம்பி முத்தாஹிர் மற்றும் மாமியாருடன் தொடர்பிலிருந்த காலிப் ஆகியோருடன் நடத்தப்பட்ட விசாரணையில் யாஸ்மீன் மற்றும் காலிப்பிற்கு இருந்த தொடர்பை ஆஷிகா பர்வீன் தெரிந்துக் கொண்டதாலும் யாஸ்மீனின் அம்மாவிடம் நெரிவித்ததாலும் மேலும் இந்தொடர்பை மற்றவர்களிடமும் சொல்லி விட கூடும் என்பதால் ஆஷிகாவை சைனைடு விஷம் கலந்து கொன்று விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். 

எனவே இவ்வழக்கானது 302 IPC ஆக மாற்றப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் ஆஷிகா பர்வீன் என்பவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்றும் லவ்ஜிகாத் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றியதாகவும் சிலர் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருவதாக தெரிய வருகிறது. 

இந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் இஸ்லாமியர்களே என்றும், இவ்வழக்கானது குடும்ப பிரச்சனை காரணமாக நடந்த கொலையால் பதியப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனவே தவறான செய்தி பாப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
Police have arrested 4 people including husband, mother-in-law and brother-in-law in the case of the mysterious death of a young woman on 23rd of last month 
                  

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா இவரது மனைவி யாஸ்மின் இவர்களுக்கு இம்ரான், முக்தார் ,என, 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி வண்டிச்சோலை பகுதி அப்துல் சமது என்பவரது மகள் நிலாபர் நிஷா தம்பதியின் மகள் ஆஷிகா பர்வீன் என்பவரை இம்ரான் காதலித்து திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23 ம் தேதி  மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன் இறந்து கிடந்தார். அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திகொண்டார் என கூறப்பட்ட நிலையில் ஆஷிகா பர்வீன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இம்ரானின் குடும்பத்தினர் தான் எனது மகளை கொலை செய்திருக்கலாம் எனவும் அவரது பெற்றோர் ஊட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 194ன் கீழ்  போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், காபியில் சயனைடு விஷம் கலந்து ஆஷிகா கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஆஷிகா பர்வீனின் கணவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்  வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதில் ஏற்பட்ட பிரச்சினையில் தான் அவர்கள் சயனைடு கலந்த கலந்த காபியை கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இம்ரான் மற்றும் யாஸ்மின், முக்தார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

Jawaharullah hails from Bennett Market near Ooty, Nilgiris District and his wife Yasmin has 2 sons, Imran and Mukhtar.In this case, 2 years ago, Imran fell in love with Ashika Parveen, the daughter of Nilabar Nisha, the daughter of Abdul Samad of Ooty Vandicholai, and they have a 2-year-old child.

 In this case, Ashika Parveen was found dead in a mysterious manner on June 23. While it was said that she had committed suicide by consuming poison, her parents filed a complaint at the Ooty police station, suspecting the death of Ashika Parveen and saying that Imran's family might have killed my daughter.

While the police registered a case of suspicious death, the post-mortem report revealed that Ashika was killed by cyanide poisoning in coffee. After that, the police arrested Imran and his family and interrogated him It has been revealed that Ashika Parveen's husband and their family tortured her by asking for dowry and it was because of this problem that they killed her by giving her coffee mixed with cyanide. Subsequently, the police have arrested 4 people including Imran, Yasmin and Mukhtar.

Tags: FACT CHECK தமிழக செய்திகள்

Give Us Your Feedback