Breaking News

சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர் - மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன் பரபரப்பு பேட்டி முழு விவரம் savukku shankar released from jail

அட்மின் மீடியா
0

மதுரை சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர் முழு விவரம் savukku shankar released from jail

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா  தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

மேலும் சவுக்கு சங்கருக்கு எதிராக வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் அவரை உடனடியாக பிணையில் விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar
Savukku Shankar

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் தேனியில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வைத்திருந்ததாகவும், மேலும் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்து சென்னை கமிஷனர் போட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாகவும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் 2வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெறுகிறோம்” என்று தகவல் தெரிவித்தனர்.
 
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலையான பின் சவுக்கு சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 

நீதிமன்றங்களுக்கு நன்றி.. எனது வழக்கறிஞர்களுக்கு நன்றி, தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு முறை குண்டர் சட்டத்தில், பவள விழா கொண்டாடும் ஒரு கட்சி என்னை அடைத்திருக்கிறது என்பது உள்ளபடியே வெட்கக்கேடு

நான் நடத்திய வந்த சவுக்கு மீடியா அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதற்காக, என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது தமிழகம் முழுக்க நான் போலீஸ் வாகனத்தில் அலைகழிக்கப்பட்டேன்  தற்போது வெளியே வந்துள்ள நான் மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன்" என்று சவுக்கு சங்கர் பேட்டியின் போது கூறினார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback