Breaking News

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து உச்சநீதிமன்றம் உத்தரவு Savukku Shankar

அட்மின் மீடியா
0
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா  தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

மேலும் சவுக்கு சங்கருக்கு எதிராக வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் அவரை உடனடியாக பிணையில் விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar
Savukku Shankar

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் தேனியில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வைத்திருந்ததாகவும், மேலும் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்து சென்னை கமிஷனர் போட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாகவும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் 2வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெறுகிறோம்” என்று தகவல் தெரிவித்தனர்.
 
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். 
 
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைத்த உடன் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

savukku,
savukku twitter,
savukku shankar twitter,
savukku shankar wife,
savukku shankar wikipedia,
சவுக்கு சங்கர்,
savukku shankar family,
who is savukku shankar,
savukku shankar website,

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback