Breaking News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் முழு விவரம் Special trains on the occasion of Ganesha Chaturthi

அட்மின் மீடியா
0

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் முழு விவரம் Special trains on the occasion of Ganesha Chaturthi

தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை சிறப்பு ரயில்:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.6ம் தேதி மாலை 3.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு கோவை சென்றடையும். 

மறுமார்க்கத்தில் செப்.8ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7.35 மணிக்கு சென்னை வந்தடையும் 

நெல்லை தாம்பரம் சிறப்பு ரயில்

நெல்லையில் இருந்து இன்று செப்டம்பர் 4ம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06040) 

நாளை செப்டம்பர் 5ம் தேதி காலை 11.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback