இலங்கையின் புதிய அதிபர் யார்? வாக்கு எண்ணிக்கை முன்னனி நிலவரம் Sri Lankan presidential elections results
இலங்கையின் புதிய அதிபர் யார்? வாக்கு எண்ணிக்கை முன்னனி நிலவரம் Sri Lankan presidential elections results
கடந்த 2019 நவம்பரில் இலங்கையில் நடைபெற்ற 8வது அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று ஆட்சி நடந்த்தி வந்தார் Sri Lanka elections result 2024 LIVE Updates
கோத்தபய ராஜபக்சே சரிவர ஆட்சி நடத்தாததால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.
இதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். மேலும் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சிறைபிடித்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டிற்கு செப்டம்பர் 21ஆம் தேதி பொது தேர்தல் நடைபெரும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்து தேர்தல் நடந்து முடிந்தது
அதிபர் தேர்தல் களத்தில் மொத்தம் 38 வேட்பாளர்கள் உள்ளனர்.
அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்க,
ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச,
தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நமல் ராஜபக்ச
ஆகிய 4 பேர் இடையே கடுமையான போட்டி நிலவியது.
மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சிலதமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இலங்கையில் தேர்தல், விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெற்றது. இதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து 3 பேரை தேர்வு செய்யலாம்.
அதாவது, ஒரு வாக்காளர் தனது விருப்பத்தின் அடிப்படையில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கலாம். இதில் வாக்காளர் குறிப்பிடும் முதல் வேட்பாளர் முன்னுரிமையை பெற்றவர் ஆகிறார்.
வாக்கு எண்ணிக்கையின்போது, ஒன்றாம் எண் வாக்குகளை 50 சதவீதத்துக்கு மேல் பெற்ற வேட்பாளர் புதிய அதிபராக அறிவிக்கப்படுவார். எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெறவில்லை என்றால் முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளை பெறுபவர் புதிய அதிபராக அறிவிக்கப்படுவார்
தேசிய மக்கள் சக்தி தலைவர் ANURA KUMARA DISSANAYAKE முன்னிலையில் உள்ளார்
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://results.elections.gov.lk/
Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்