Breaking News

புல்டோசர் நடவடிக்கை - நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வீடுகளை இடிக்க தடை உச்சநீதிமன்றம் உத்தரவு supreme court bulldozer action

அட்மின் மீடியா
0
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வீடுகளை இடிக்க தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • பொது சாலை, நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது


நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு எதிரான அங்கீகரிக்கப்படாத புல்டோசர் நடவடிக்கையை அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடைநிறுத்தியது உச்ச நீதிமன்றம், 

பாஜக ஆளும் மாநிலங்களில் வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரின் வீடுகளை புல்டோசர் வாயிலாக இடிக்கப்படுகின்றது 

இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்று இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் BR கவாய், KV விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும் பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் ஏன் இடிக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜக ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் பொதுஇடம், நடைபாதை, ரயில்வே தடம் மற்றும் நீர்வழிப்பாதை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

அடுத்த  உத்தரவு இல்லாமல் நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் இடிப்புகள் எதுவும் செய்யக்கூடாது. இருப்பினும், பொதுத் தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள் அல்லது பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அத்தகைய உத்தரவு பொருந்தாது என்று நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.

Tags: அரசியல் இந்திய செய்திகள்

Give Us Your Feedback