Breaking News

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் தேர்வுத்துறை உத்தரவு Tamil examination is mandatory for minority language students

அட்மின் மீடியா
0

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் தேர்வுத்துறை உத்தரவு Tamil examination is mandatory for minority language students, according to the order of the examination department


இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் மொழிகளை தாய் மொழியாக கொண்ட மாணவர்களும், இந்தாண்டு தமிழ் பாடத்தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டியது அவசியம் என தேர்வுத்துறை உத்தரவு அளித்துள்ளது. 

தமிழை தாய்மொழியாக கொண்டிராத 10ம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக  தமிழ் பாடத்தேர்வில் இருந்து கடந்தாண்டு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும். 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் இதன் மூலம் கூறப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback