Breaking News

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் யார் யாருக்கு என்ன இலாக்கா முழு விவரம் TN Ministers

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் - யார் யாருக்கு என்ன பதவி முழு விவரம் TNMinisters

தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின்  நாளை பொறுப்பேற்கிறார். 

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என பல மாதங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
 
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

3 அமைச்சர்கள் நீக்கம் :-

தற்போது பால்வளத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ், 

சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான், 

சுற்றுலா துறை அமைச்சரான கே. ராமசந்திரன் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து விடுவித்து முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் 

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு, வனத்துறை வழங்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாடு துறை வழங்கப்பட்டுள்ளது. 

வனத்துறையை அமைச்ச்ராக இருந்த  மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டிருக்கிறது. 

பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள்:-

செந்தில்பாலாஜி 

ஆவடி சா.மு. நாசருக்கு

கோவி. செழியன் . 

பனைமரத்துபட்டி ராஜேந்திரன்

குன்னூர் ராமசந்திரன்

புதிய அமைச்சர்களுக்கு பதவி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது






RAJ BHAVAN, TAMIL NADU - PRESS RELEASE 

The Hon'ble Chief Minister of Tamil Nadu has recommended to the Hon'ble Governor of Tamil Nadu to allot the portfolio of Planning and Development to Thiru Udhayanidhi Stalin, Minister for Youth Welfare and Sports Development, in addition to his existing portfolios and be designated as Deputy Chief Minister. Further the Hon'ble Chief Minister has recommended to induct Thiru V.Senthilbalaji, Dr. Govi. Chezhiaan, Thiru R.Rajendran and Thiru S.M.Nasar in the Council of Ministers. The Hon'ble Governor has approved the recommendations. 

The Swearing-in-Ceremony of the Ministers designate will be held on 29.9.2024, Sunday, at 3.30 P.M. in Raj Bhavan, Chennai. The Hon'ble Governor has also approved the recommendation of Hon'ble Chief Minister to drop Thiru T. Mano Thangaraj, Minister for Milk & Dairy Development, Thiru Gingee K.S.Masthan, Minister for Minorities Welfare and Non-Resident Tamils Welfare and Thiru K. Ramachandran, Minister for Tourism, from the Council of Ministers. The Hon'ble Governor has approved the recommendation of Hon'ble Chief Minister for change of portfolios and subject allocations of the following Ministers:-
                          

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback