தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tnuhdb online apply
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த விலைக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது
தமிழக அரசு தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் அதாவது நீர்நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், கடலோர பகுதிகள், பேரிடர் பகுதிகள் போன்ற அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்போது இந்த இணையதளத்தில் தமிழகம் முழுவதும் 62 திட்டங்களில் 22,049
அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்வதற்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://tnuhdb.org.in/
தகுதிகள்:-
சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் மற்றும் ஆட்சேபகரமான பகுதியில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் ஆகிய பகுதிகள் வாரியத்தால் குடிசை பகுதி என பிரகடனம் செய்யப்பட்டது.
அப்பகுதியில் வசித்து வரும் குடிசை வாசிகளுக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சுகாதார வசதியுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற அரசாணை எண்.10, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்(UHD - 3)துறை, நாள்.25.01.2022 - ன்படி கீழ்கண்ட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
.அ) பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் என்பதை உறுதி செய்ய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 / -ற்கு குறைவாக இருக்க வேண்டும்.இதற்கான வருவாய் துறை சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆ) குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தங்களது பெயரில் குடியிருப்பு மற்றும் மனைகள் இருக்க கூடாது. இதற்கான உறுதி மொழிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
இ) குடிசைப்பகுதி, ஆட்சேபனை உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான நீர் நிலை, காப்பு காடுகள், அபாயகரமான பகுதிகளான வெள்ள சேதபகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள்.
ஈ) சிதலமடைந்த வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள்.உ) சாலையோரத்தில் வசிப்பவர்கள்.
ஊ) திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்.Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி