Breaking News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மரணமடைந்தார் vellaiyan passed away

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மரணமடைந்தார் vellaiyan passed away

 


சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் வெள்ளையன் இன்று காலமானார்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் (76), நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

செப்டம்பர் 3-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா், செப்.5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback