Breaking News

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முழு விவரம் Vinesh Phogat joined the Congress party

அட்மின் மீடியா
0

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் வினேஷ் போகத் முழு விவரம் Vinesh Phogat joined the Congress party

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்

ஹரியாணா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியில் வினேஷ் போகத் இணைந்துள்ளதால், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்தபோது பிரிஜ்பூஷண் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக அவரை பதவி நீக்கம் செய்யக்கோரிய போராட்டத்தில், வினேஷ் போகத் - பஜ்ரங் புனியாவுடன் சாக்‌ஷி மாலிக்கும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback