Breaking News

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு வைரல் வீடியோ Viral video of landslide in Uttarakhand state

அட்மின் மீடியா
0

 உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு வைரல் வீடியோ Viral video of landslide in Uttarakhand state


  • ஆன்மீக சுற்றுலா சென்ற 30 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர்- கடலூர் மாவட்ட ஆட்சியர்

  • உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலாச் சென்ற இடத்தில் நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் 30 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தகவல். 

  • வானிலை நன்றாக இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு இன்றே தமிழ்நாடு அழைத்து வரப்படுவார்கள் என ஆட்சியர் உறுதி



உத்தராகண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சில பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவிக்கின்றனர்

மேலும், அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூரைச் சேர்ந்த 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவிக்கையில், ‘உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். தமிழர்கள் 30 பேருக்கும் தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1835160688639328752

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback