Breaking News

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட உரிமையாளரை ஷூவால் அடிக்க சென்ற போலீஸ் வைரல் வீடியோ Viral video of police hitting the owner with a shoe

அட்மின் மீடியா
0

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட உரிமையாளரை ஷூவால் அடிக்க சென்ற போலீஸ் வைரல் வீடியோ Viral video of police hitting the owner with a shoe after he asked for money for the food he had eaten

 


தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உணவகத்தில் உணவு சாப்பிட்ட எஸ்எஸ்ஐ காவேரி என்பவர், நிலுவை பணம் ரூ.20 கேட்ட உரிமையாளர் முத்தமிழ் என்பவரை காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்க சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர்  மருத்துவமனை எதிரில் உள்ள உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு உணவுக்கான மொத்தபணத்தையும் கொடுக்காமல் சிறிது தொகை கொடுத்துவிட்டு மீதபணத்தை நாளை தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு உணவு சாப்பிட வந்த காவேரி, சாப்பிட்டுவிட்டு செல்லும் போது கடை உரிமையாளர் முத்தமிழ் என்பவர், நேற்று சாப்பிட்டதில் நிலுவை தொகை கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி, உரிமையாளர் முத்தமிழை தகாத வார்த்தையால் பேசி பணத்தை தூக்கி வீசி காலில் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்க சென்றுள்ளார். ஆனால் அருகில் இருந்தவர்கள் தடுத்ததால், அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது‌. மேலும் ஷூவை கழற்றி தாக்க முயன்ற எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/Crime_Selvaraj/status/1831231594759356467

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback