Breaking News

வக்பு திருத்தச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அமித்ஷா அறிவிப்பு Waqf Act Ammendment Bill 2024 to be passed in Parliament soon Amit Shah

அட்மின் மீடியா
0

வக்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அமித்ஷா அறிவிப்பு Waqf Act Ammendment Bill 2024 to be passed in Parliament soon: Amit Shah

வக்ப் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது அதனை தொடர்ந்து மக்களவையில் இதுதொடர்பான திருத்த மசோதா ஆகஸ்ட் 8  ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது இந்த மசோதாவிற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டத்தில் மசோதா மீதான தங்களது கருத்துகளை, பொதுமக்களும் தெரிவிக்க ஏதுவாக பொதுமக்கள், என்.ஜி.ஓ.,க்கள், நிபுணர்கள், நிறுவனங்கள் என, அனைத்து தரப்பினரும் வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து  15 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது அதன்படி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
 

 
இந்நிலையில் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்தல், பாதுகாத்தல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் குறிக்கும் வக்ஃப் (திருத்த) மசோதா 2024 கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்துள்ளார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 வக்ஃப் சொத்துகளை நிர்வகித்தல், பாதுகாத்தல் மற்றும் தவறாக பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும என தெரிவித்துள்ளார.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback