Breaking News

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் சாதனை உலகின் முதல் தனியார் நிறுவன விண்வெளி நடைபயணம் வீடியோ world's first private spacewalk

அட்மின் மீடியா
0

சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் வெளியே வந்து விண்கலனில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். இதுவரை இந்த பணிகளை அரசு நிறுவனங்களான நாசா உள்ளிட்டவைதான் மேற்கொண்டு வந்தன. ஆனால் முதல் முறையாக  எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம் விண்வெளி நடை பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.



புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர். பூமிக்கு மேலே 870 மைல்கள் (1,400 கிமீ) வரை செல்லும்.கடந்த 1970களில் நாசாவின் அப்பல்லோ திட்டம் நிறுத்தப்பட்டதில் இருந்து, எந்த விண்வெளி வீரரும் அவ்வளவு தூரம் வரை பயணிக்கவில்லை

தற்போது 700 கி.மீ. உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து 'ஸ்பேஸ் வாக்' எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர்.விண்வெளியில் தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத குழு ஒன்று ஸ்பேஸ் வாக் செய்திருப்பது இதுவே முதல்முறை.

இவர்கள் விண்வெளியில் இருப்பது போன்ற காட்சியையும், அங்கிருந்த பூமியை காண்பிக்கும் காட்சியையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களில் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளியில் நடப்பது போன்ற காட்சியையும் வெளியிட்டுள்ளது.

அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா? என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர். 

மொத்தம் 5 நாட்கள் பயணத்தின் 3-வது நாளான இன்று 'ஸ்பேஸ் வாக்' மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீதம் உள்ள நாட்களில் 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/SpaceX/status/1834185100281741612

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/SpaceX/status/1834154037606056327

Tags: தொழில்நுட்பம் வைரல் வீடியோ

Give Us Your Feedback