Breaking News

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை 14 ம் தேதி வெளியிடப்படும் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை 14 ம் தேதி வெளியிடப்படும் அன்பில் மகேஷ் அறிவிப்பு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்தக் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.

தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை திறந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும், அதாவது மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும்.

அந்தவகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எந்த தேதியில் தொடங்கி எந்த தேதி வரை நடைபெறும், செய்முறை தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அட்டவணையை வரும் அக்டோபர் 14ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோவையிலிருந்து வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்தக் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்" என தெரிவித்துள்ளார்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback