Breaking News

குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டிய இர்பான் விவகாரம் - மருத்துவமனைக்கு10 நாட்களுக்கு தடை ₹50,000 அபராதம்

அட்மின் மீடியா
0

குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டிய இர்பான் விவகாரம் - மருத்துவமனைக்கு10 நாட்களுக்கு தடை ₹50,000 அபராதம் 

பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஹசீஃபா - இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாக அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனே இர்பான் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன் இச்செயலுக்காக மன்னிப்பு கேட்டு இருந்தார்

இந்நிலையில் இர்ஃபான் மீண்டும் தனது மனைவிக்கு தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்த சென்னை ரெயின்போ மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த ஊரக நலப்பணிகள் இயக்ககம் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback