அமெரிக்காவில் 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை ஏற்படுத்திய மில்டன் புயல் கரையை கடந்தது வைரல் வீடியோ
அமெரிக்காவில் 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை ஏற்படுத்திய மில்டன் புயல் கரையை கடந்தது வைரல் வீடியோ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மேற்கு கடற்கரை நகரில் அமெரிக்க வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பை ஏற்படுத்தி கரையை கடந்துள்ளது
அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு ‛மில்டன்' என பெயரிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 270 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது.
மில்டன் புயல் காரணமாக புளோரிடா மாகாணத்தில் 20,00,000க்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. முன்னெச்சரிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புளோரிடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள புனித லூசி கவுன்டியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூறாவளி தாக்கியதில் நேற்றிரவு 11 மணியளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர்.சூறாவளியால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மீட்பு பணியிலும் பாதிப்பு ஏற்பட கூடும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1844324223336185957
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1844323266464514197
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1844323068409414128
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1844322644927402043
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ