12 மணி நேரத்தில் நடந்த ஆச்சர்யம்... வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை பாராட்டிய கிரிக்கெட் வீரர்
12 மணி நேரத்தில் நடந்த ஆச்சர்யம்... வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை பாராட்டிய கிரிக்கெட் வீரர்
கோவையில் கடந்த இரு தினங்களாக பரவலாக பெய்த கன மழையால் கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் நடந்த ரஞ்சி கோப்பை மைதானமே குளம் போல் மாறியது. உடனடியாக செயல்பட்டு மழை நீரை விரைவாக அகற்றிய மைதான ஊழியர்களுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் வீரர் ஜெய்தேவ் உனத்கட்.
இதுதொடர்பாக ஜெய்தேவ் உனத்கட் தனது சமூகவலைதள பக்கத்தில், “அனைத்து நிலை கிரிக்கெட்டுகளுக்கும் சிறந்த உள்கட்டமைப்பை பெற்றுள்ளது தமிழ்நாடு. TNCA-ன் இந்த செயல் மற்ற கிரிக்கெட் சங்கங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1846558931901882579
Tags: தமிழக செய்திகள்