எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ தெரில.. உங்க கிட்ட வந்து மாட்டி 14 வருஷ வாழ்க்கைய இழந்துட்டோம் கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ தெரில.. உங்க கிட்ட வந்து மாட்டி 14 வருஷ வாழ்க்கைய இழந்துட்டோம் நாதக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் குமுறல்
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி
சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார் என கிருஷ்ணகிரி மண்டல நா.த.க. ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கரு.பிரபாகரன் அறிவித்துள்ளார்
இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் அறிவித்துள்ளார். மேலும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார்.கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு தற்போது செயல்பாடுகள் சரி இல்லை. யாருக்கும் அங்கிகாரம் கிடைக்க கூடாது என உழைத்தவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள்.
தமிழகத்தில் எந்த பொருப்பாளரளையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. சீமான் பணத்துக்கு விலைபோய்விட்டார் என கருதுகிறோம். செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது.
மாதம் 2.5 லட்சம் வாடகை, 3 பேருக்கு 15 வேலை ஆட்கள் என சொகுசாக வாழ்கிறார்கள், ஆனால் ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.எந்த ஜென்மத்து பாவமோ தெரியவில்லை நாம் தமிழர் கட்சியில் இணைந்து விட்டோம்
கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களோடு இணைந்து தமிழ் தேசிய பொது உடமையோடு புதிய அரசியல் கட்டமைப்பு அடுத்த வருடம் மாவீரர் தினத்திற்குள் மூன்னேடுப்போம் எடுப்போம் என தெரிவித்தார்
மேலும் கட்சியில் இருந்து விலகும் முக்கிய பொறுப்பாளர் விவரம் வருமாறு கிருஷ்ணகிரி மண்டல செயலர் கரு ,பிரபாகரன்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இர்ஃபான் ,மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன்,கிருஷ்ணகிரி தொகுதி தலைவர்திருமூர்த்தி,கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் காசிலிங்கம்பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான்,ஊத்தங்கரை தொகுதி செயலாளர்.ஈழமுரசுகாவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் ,செல்வாஆகியோர் தங்களை கட்சியிலிருந்து விடுபட்டு கொள்வதாக கூட்டாக பேட்டி அளித்தனர்.
Tags: அரசியல் செய்திகள்