Breaking News

பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழந்தனர்நைஜீரியாவில் சோகம் Over 140 people confirmed dead in tanker explosion while scooping spilled fuel in Jigawa State, Nigeria

அட்மின் மீடியா
0
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.Over 140 people confirmed dead in tanker explosion while scooping spilled fuel in Jigawa State, Nigeria



நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. 

அப்போது அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை வாளி, பக்கெட், கேன் என அனைத்திலும் சேகரித்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து இந்த விபத்தில் 140 பேர் இதுவரை உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback