144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகள் Iqrom Rifadly Fahmi Zainal, & Maitryee Shrikrishna Shitole! ஆகியோருக்கு குவியும் பாராட்டுகள்
144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகள் Iqrom Rifadly Fahmi Zainal, Maitryee Shrikrishna Shitole! ஆகியோருக்கு குவியும் பாராட்டுகள்
தொழில்நுட்பக் கோளாறால் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானத்தை, திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகள் இக்ரோம் ரிஃபாத்லி ஃபாமி ஜைனால் மற்றும் மைத்ரி ஸ்ரீகிருஷ்ணா ஷிதோல் ஆகியோருக்கு நாடு முழுக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Huge salute to Pilot Iqrom Rifadly Fahmi Zainal and Co-pilot Maitryee Shrikrishna Shitole
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்தது
விமானத்தில் எரிபொருள் அதிகமாக இருந்ததால், விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவேளை லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கினால் தரையில் மோதி தீ ஏற்பட்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பிருந்ததால், விமானத்தை தரையில் இறக்காமல் முடிந்தளவு வானில் வட்டமிட்டு எரிபொருளை குறைக்கும் முயற்சியில் விமானக்குழு ஈடுபட்டது
சரியாக 8.15 மணியளவில் திருச்சியிலேயே பாதுகாப்பாக தரையிறங்கியது. நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தில் சிக்கிய 144 பயணிகளையும், சாதுர்யமாக செயல்பட்டு, எந்த அசம்பாவிதமும் இல்லாமல் விமானிகள் இக்ரோம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல் (Iqrom Rifadly Fahmi Zainal) பத்திரமாக தரையிறக்கினர்.விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு உலகம் முழுவதும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள்
விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் கோளாறுக்கு பிறகு அதை பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக அதன் விமானி மற்றும் துணை விமானிக்கு நன்றி. இந்த முயற்சி மற்றும் பதற்றமான தருணத்தில் காக்பிட் மற்றும் கேபின் குழுவினரின் துணிச்சல் மற்றும் அமைதியான தொழில்முறை செயல்பாடு உண்மையிலேயே சிறப்புமிக்கது. விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய அவசர சேவைகளில் ஈடுபட்டோர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது இதயபூர்வ பாராட்டுக்கள். பயணிகள் அனைவரும் இனிதான பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள்:-
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும், அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன்.பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது கூறியுள்ளேன்.பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்என அதில் தெரிவித்திருந்தார்.
மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் மக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விமானிகள் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1844924226597216760
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி