கனமழை காரணமாக இன்று 15 .10.2024 பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக இன்று 15 .10.2024 பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக இன்று 11.11.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக இன்று 15.10.2024 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று அதிகாலை 05.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுசேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது
இதன் காரணமாக 17ம் தேதி வரை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
1.சென்னை
2.காஞ்சிபுரம்
3.செங்கல்பட்டு
4.திருவள்ளூர்
5.கடலூர்
6.விழுப்புரம்
7. புதுச்சேரி
8. கோவை (அரை நாள் மட்டும் விடுமுறை)
ஆகிய மாவட்டங்களில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பு:- வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-
வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமையன்று அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னேற்பாடுகளையும் எடுக்குமாறு அறிவுறுத்திய அவர், கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் வலியுறுத்தினார்.
இதற்காக, சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து, இவ்வார இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலாத் தலங்கள், கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழையை எதிர்க்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளது என தலைமைச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
தலைநகர் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையும் அதற்கு மறுநாள் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த காலங்களில் பெருமழை பெய்தபோது சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 180 இடங்களைக் கண்டறிந்து, அங்குக் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்குச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அத்துடன் பருவமழை முடியும் வரை அவசரகாலப் பணிகளைத் தவிர்த்து, சாலைத் தோண்டும் பணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் 172 துயர்துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 21,000 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.