Breaking News

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது 17 ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை முழு விவரம்

அட்மின் மீடியா
0

 வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது


தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று அதிகாலை 05.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுசேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது

இதன் காரணமாக 17ம் தேதி வரை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை இருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

15.10.2024: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தில் வருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை நிருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாகர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback