காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் வானிலை மையம் கணிப்பு
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
வரும் 17-ம் தேதி அதிகாலை புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் கணிப்பு
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்யும் என்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் சென்னையின் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில்:-
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையை கடக்க கூடும் என தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்