Breaking News

காருக்கு வழி விடாதவர் மீது தாக்குதல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

காருக்கு வழி விடாதவர் மீது தாக்குதல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன முழு விவரம்

தூத்துக்குடி மாவட்டம், பண்டார விளை, சுயம்புலிங்க சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடேசன் மகன் ஜெகன் (35), ஆறுமுகநேரியில் பாதிரியாராக உள்ளார்.  நேற்று மதியம் 12 மணியளவில் ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, 

 


ஓட்டப்பிடாரம் அருகே நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு  வேலுமணி மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் காா்களில் சென்று கொண்டிருந்த போது கார் முந்தி செல்ல முயன்ற போது ஜெகன் வழி விடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவரது காரை விரட்டி சென்று தூத்துக்குடி புதிய துறைமுகம் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே வழிமறித்து நிறுத்தி அவரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.  இதில் காயம் அடைந்த ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூா் செ.ராஜு உள்பட 17 போ் மீது முத்தையாபுரம் போலீசார், சட்ட விரோதமாக தடுத்து நிறுத்துதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து ஜெகன் கூறுகையில்:-

ஆறுமுகநேரியில் இருந்து நான் காரில் சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் அதிமுகவினர் வழி கேட்டு ஹாரன் அடித்தார்கள். எதிரே வாகனங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்ததால் என்னால் வழிவிட முடியவில்லை. ஆனால் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே சென்ற போது அவர்களது காருக்கு வழி விட்டேன். ஆனால் அவர்கள் எனது காரை சுற்றி வளைத்து என்னை தாக்கினார்கள் என்று கூறினார். 

கடம்பூர் ராஜூ கூறுகையில்:-

நானும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் திருச்செந்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த போது தங்களது காருக்கு முன்னால் சென்ற காரை ஓட்ட தெரியாமல் தாறுமாறாக ஒரு நபர் ஒட்டி சென்றதாகவும் 

சிறிது தூரத்தில் நான்கு வழிச்சாலையில் அந்த காருக்கு முன்னால் வழிமறித்து ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அந்தக் காரை ஓட்டி வந்து நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் நானும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அங்கு சென்று கேட்டதற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்களை இந்த கார் மோதும்படி வந்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த பைக்கில் வந்த நபர்களையும், கார் ஓட்டி வந்தவரையும் இது போன்று நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று பேசி சமாதானம் செய்து சரியாக காரை ஓட்டி நல்லபடியாக போய் சேருங்கள் என அனுப்பி வைத்தோம் என கூறியுள்ளார்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback