நடிகர் ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார் அவர் நலமுடன் இருக்கிறார் அப்போலோ மருத்துவமனை அறிக்கை Superstar Rajinikanth's Health Update
நடிகர் ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார் அவர் நலமுடன் இருக்கிறார் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை Superstar Rajinikanth's Health Update
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் Trancatheter முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்