Breaking News

தாய்லாந்து பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து தீவிபத்து 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பலி வைரல் வீடியோ School bus fire in Thailand kills at least 23

அட்மின் மீடியா
0

தாய்லாந்து பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து தீவிபத்து... 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பலி வைரல் வீடியோ School bus fire in Thailand kills at least 23

School bus fire in Thailand kills at least 23

தாய்லாந்தில் சுமார் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற பள்ளி பேருந்து ஒன்று பாங்காக் புறநகர் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வடக்கு மாகாணமான உதய் தானியில் பள்ளிக்கு சுற்றுலா சென்று திரும்பும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 44 பேருடன்  சென்ற மூன்று பேருந்தில் பேருந்தும் ஒன்று  அயுத்தாயாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தலைநகரின் வடக்குப் புறநகர் பகுதியான பத்தும் தானி மாகாணத்தில் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. 

சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் இருந்து 16 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கையில், பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்திருப்பது தெரிகிறது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1841076299659431974

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback