Breaking News

பெண்களுக்குக்கான இலவச அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண்ணிடம் ரூ.200 அபராதம் வசூல் - நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பெண்களுக்குக்கான இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண்ணிடம் ரூ.200 அபராதம் வசூல் - நடந்தது என்ன முழு விவரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் - புளியம்பட்டி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தில் ஒரு பெண் ஏறி இருக்கிறார் அந்த பேருந்து மகளிர் இலவச பேருந்து என்பதால் அவர் பேருந்தில் டிக்கெட் வாங்கவில்லை.

இந்நிலையில் பேருந்தில் இருந்து பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் அவர் கீழே இறங்கிய போது டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணிடம் டிக்கெட் கேட்டார். பேருந்தில் நான் ஏறியதில் இருந்து ஆண்கள் பகுதியிலேயே நடத்துனர் இருந்ததால் டிக்கெட் எடுப்பதற்குள் எனது நிறுத்தம் வந்துவிட்டது என்று அந்த பெண் கூறிய நிலையில், இதனை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்மணியிடம் ரூ.200 அபராதம் விதித்துள்ளார்.

என்னிடம் பணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து பேருந்து நடத்துனரின் 'ஜி பே' எண்ணுக்கு அபராத தொகை ரூ.200 அனுப்பச் சொல்லி டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார். இதனையடுத்து ரூ.200 அபராத பணத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார் .இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் போக்குவரத்துதுறை விளக்கம் அளித்துள்ளது

இது குறித்து தமிழக போக்குவரத்து துறை தனது டிவிட்டர் பக்கத்தில்:-

27.10.2024 அன்று காலை திருப்பூரிலிருந்து புளியம்பட்டிக்கு சென்ற வழித்தடம் எண் 30 என்ற பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணச்சீட்டு பெறாததால் ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது துரதிஷ்டவசமானது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் அபராத தொகை பெற்றதும் அதற்கான உரிய ரசீது வழங்குவதற்குள் பயணி அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையாக வாங்கப்பட்ட ரூ. 200 ரொக்க பணம் உரிய பயணியிடமே திருப்பி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback