Breaking News

வங்கக்கடலில் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு! DANA என பெயர் முழு விவரம்

அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு! DANA என பெயர் முழு விவரம் dana cyclone

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

 

dana cyclone

மேலும் இந்த புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த DANA என பெயரிடப்படவுள்ளது 

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இதனால்

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் 

மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றின் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.22-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்து, அக்.23-ல் கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது

 அக்.24ம் தேதி காலைக்குள் ஒடிசா - மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி வடமேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும் புயல் ஒடிசா கடற்கரையை நோக்கி செல்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback