Breaking News

தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு முழு பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு


தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு, வரும் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தவெக வெளியிட்ட அறிக்கையில், 

கழகத் தலைவர் அறிவித்தபடி. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா. வருகிற 27.10.2024 அன்று. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், தலைவர் விஜய்யின் ஆணைப்படி. சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் அந்த அறிவிப்பில்:-

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முழு மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 

முழு பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/TVKHQUpdates/status/1845412476550078888













Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback