பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு முழு விவரம்
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 79 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் என்று சிவான் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் உள்ள பலர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். வீட்டிற்கு சென்ற அவர்களுக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்