Breaking News

தவெக மாநாட்டிற்கு சென்ற 2 பேர் ரயிலில் இருந்து குதித்து விபத்தில் பலி - முழு விவரம்

அட்மின் மீடியா
0

தவெக மாநாட்டிற்கு சென்ற 2 பேர் ரயிலில் இருந்து குதித்து விபத்தில் பலி.. முழு விவரம்

சென்னையில் இருந்து தவெக மாநாட்டிற்கு சென்ற நிதிஷ் குமார் என்பவர் ரயில் விபத்தில் உயிரிழப்பு   ரயிலில் சென்றபோது மாநாட்டு பந்தலை பார்த்த பலர் ஆர்வமிகுதியில் ரயிலில் இருந்து குதித்தபோது தவறி விழுந்து நிதிஷ் குமார் என்பவர் உயிரிழந்தார்  படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையை சேர்ந்த நிதிஷ் குமார் என்பவர் தனது நண்பர்பகளுடன் ரயிலில் விழுப்புரத்துக்கு டிக்கெட் எடுத்து சென்றார். இந்த ரயில் இன்று அதிகாலையில் விக்கிரவாண்டியில் சென்றது. இந்த ரயில் செல்லும் தண்டவாளத்தையொட்டி 50 மீட்டர் இடைவெளியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பந்தல் உள்ளது.

இதனால் மாநாட்டு பந்தலில் மின்விளக்குகள் ஒளிர்ந்துள்ளது. இதனை பார்த்த உற்சாக மிகுதியில் நிதிஷ் குமார் உள்பட 2 பேர் ரயிலில் இருந்து கீழே இறங்க முடிவு செய்தனர். அதோடு மெதுவாக சென்ற ரயிலில் இருந்து இருவரும் கீழே குதித்தனர். இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த நிதிஷ் குமார் உள்பட 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நிதிஷ் குமார் இறந்தார். இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக சென்னை தேனாம்பேட்டை சிக்னலில் நடிகர் விஜயின் கட்சியை சேர்ந்த 2 தொண்டர்கள் சென்ற இருசக்கர வாகனமும், லாரியும் மோதியது. அதில் ஒருவர் பலியான நிலையில் இன்னொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது வரை விபத்து வகையில் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது சோகமான விஷயமாகும்.

தாம்பரம் அருகே நன்மங்கலம் பகுதியில் இருந்து டெம்போ ட்ராவல் 11 பேர் மாநாட்டுக்கு நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டனர்.வாகனத்தை நன்மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் இயக்கியுள்ளார். தாம்பரம் - வேளச்சேரி சாலை சந்தோசபுரத்தில் வந்த போது முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் வேனில் பயணம் செய்த 11 பேர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback