சேலம் அருகே பரபரப்பு சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கொலையாளியை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
சேலம் அருகே பரபரப்பு சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கொலையாளியை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்கம்பாளையம் என்ற பகுதி உள்ளது.இங்கு நேற்று சாலையோர பாலத்திற்கு அடியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது, அதில் அழுகிய நிலையில் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் நிர்வாண நிலையில் இருந்தது.
முகத்தில் 3 பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடப்பட்டு, பெட்ஷீட்டால் உடல் முழுவதும் சுற்றப்பட்டிருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்தது மேலும் அந்த பெண்ணின் இரு கைகளிலும் தலா 6 விரல்கள் என 12 விரல்கள் இருந்தது
இதையடுத்து, தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது. அது அங்கிருந்து சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து 3 தனிபடை அமைத்து, தீ சூட்கேஸை இப்பகுதியில் வீசிச்சென்றது யார், கொலை செய்தவர் யார் என்று குறித்தெல்லாம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்