Breaking News

மகாராஷ்டிராவில் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற 35 மார்க் தேவையில்லை - 20 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற 35 மார்க் தேவையில்லை 20 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முழு விவரம்

TN Public exam 2025

பள்ளித்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி வழங்கப்படும். அதற்க்கு குறைவாக மதிப்பெண் எடுத்தால் தேர்வில் தோல்வியடைகின்றனர்

இதனால் பலரும் கல்வியைக் கைவிடுகின்றனர். இதனால் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது, இதனால் கணிதம் மற்றும் அறிவியலில் மாணவர்கள் 20 மதிப்பெண்கள் பெற்றாலே, அவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும்.

ஆனால் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது. கலை, மானுடவியல் சார்ந்து அந்த மாணவர்கள் படிப்புகளைத் தொடரலாம்'' என்று தெரிவித்தனர்.

100-க்கு குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் கலை, வணிகப் பாடங்களை மட்டும் தேர்வு செய்ய வழிவகை செய்யும் என்றும் மகாராஷ்டிர அரசு கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவர் சரத் கோசவி இதுகுறித்துக் கூறும்போது, ''இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வராது. மாநிலம் முழுவதும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த முறையும் கொண்டு வரப்படும். ஏற்கெனவே இதற்கு பள்ளிக் கல்வித்துறையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback