ஹரியானாவில் 3 வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக தேர்தல் ரிசல்ட் முழு விவரம்
ஹரியானாவில் 3 வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக தேர்தல் ரிசல்ட் முழு விவரம்
ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கின்றது பாஜக ,ஹரியானாவில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை ஆனால் பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது
ஹரியானாவில் 2009-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 90 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் 4 இடங்களில்தான் வென்றது. ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 47 இடங்களி வெற்றி பெற்றது
அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜேஜேபி கட்சி ஆதரவுடன் பாஜக 2-வது முறையாக ஆட்சியை அமைத்தது.
இந்நிலையில் 2024 ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிதான் அமையும் என அத்தனை கருத்து கணிப்புகளும் தெரிவித்த நிலையில்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களைவிட பாஜக அதிக தொகுதிகளில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி 37 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஹரியானாவில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கின்றது பாஜக!
தேர்தல் முன்னனி நிலவரம்
Bharatiya Janata Party - BJP 48
Indian National Congress - INC 37
Indian National Lok Dal - INLD 1
Bahujan Samaj Party - BSP 1
ndependent - IND 3
Total 90
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்