Breaking News

450 அடி உயரம் கொண்ட பிரமிட்டின் உச்சியில் நாய் உலாவும் வீடியோ நாய் சென்றது எப்படி முழு விவரம் Dog In Pyramid

அட்மின் மீடியா
0

Dog In Pyramid எகிப்து நாட்டில் உள்ள 450 அடி உயரம் கொண்ட கிசா பிரமிட்டின் உச்சியில் நாய் உலாவும் வீடியோ இணையத்தில் வைரல் Dog spotted hanging out on top of ancient pyramid in Egypt

பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்

எகிப்தின் கிசாவில் அமைந்துள்ள மிகப் பெரிய பிரமிட்டின் உச்சியில் ஒரு நாய் அலைந்து திரிந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

சுமார் 455 அடி உயரம் கொண்ட பிரமிட்டில் நாயால்  எவ்வாறு ஏற முடிந்தது என்பது குறித்து குழப்பம் அடைந்துள்ளனர்.கிசாவின் மிகப் பெரிய இந்த பிரமிட் ஒரு பழங்கால அதிசயமாகும், இது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது கி.மு. 2580-2565 இல் பார்வோன் குஃபுவின் ஆட்சியின் போது கட்டப்பட்டது, கம்பீரமான அமைப்பு கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளில் மிகப்பெரியது. இந்தப் பிரமிடுகளில் ஏறுவதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பிரமிடுகளை பாராகிளைடிங் மூலம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அக்டோபர் 16ஆம் தேதியன்று பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்ற சுற்றுலா பயணி செல்ஃபி எடுத்தபடி பயணித்தபோது, பிரமிடின் உச்சியில் ஏதோ நகர்வதுபோல் தெரியவே அதைக் காணொளியாக எடுத்துப் பார்த்திருக்கிறார்.

பிரமிடின் உச்சியில் நாய் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்ததைப் பார்த்து வியந்து போயிருக்கிறார்.  காணொளியை தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

உணவுக்காக பறவையை துரத்தி சென்ற நாய் உச்சியை அடைந்திருக்கும் என கூறப்படுகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1847953570080932239

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback