Breaking News

தீபாவளியையொட்டி ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் அமுதம் அங்காடிகளில் அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு

அட்மின் மீடியா
0

தீபாவளியையொட்டி ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் அமுதம் அங்காடிகளில் அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு

 


15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடக்கம் தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3.8 கிலோ எடையில் 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது

தமிழகத்தில் அமுதம் பல்பொருள் அங்காடிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு தொகுப்பு விற்பனைக்கு வருகிறது. இதில் 15 வகையான மளிகை பொருட்கள் இடம்பெற்றிருக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் நியாய விலை கடைகளை போலவே அமுதம் பல்பொருள் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுவரை சென்னை மண்டலத்தில் 22 அமுதம் பல்பொருள் அங்காடிகளும், கடலூர் மண்டலத்தில் 5 பல்பொருள் அங்காடிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான மளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி 15 வகை மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் பேரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதன் உண்மையான விலை 600 முதல் 650 ரூபாய் வரை இருக்கும்.ஆனால் அமுதம் அங்காடியில் 499 ரூபாய்க்கு விற்கிறோம். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்பும் படி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டிருந்தோம். அவர்களின் நிறைய இடங்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். 

ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் பட்டியல்:-

கடுகு +உ.உ. பகுப்பு : 125 கிராம் 

புளி : 500 கிராம்

சீரகம் : 100 கிராம் 

உப்பு : 1 கிலோ 

வெந்தியம் :100 கிராம் 

உளுத்தம் பருப்பு : 500 கிராம்

சோம்பு : 50 கிராம் 

மஞ்சள்தூள் : 50 கிராம் 

கடலை பருப்பு : 200 கிராம்

மிளகு : 50 கிராம் 

பாசிப்பருப்பு : 200 கிராம்

மிளகாய் 250 கிராம் 

வறுகடலை : 200 கிராம்

பெருங்காயத்தூள் : 15 கிராம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback