தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம்
தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம்
இந்த மாதம் எதிர்வரும் வரும் 31ம் தேதி வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை, அதற்கு அடுத்தநாள் நவம்பர் 1ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்தால், அதற்க்கு அடுத்த நாள் சனிக்கிழமை மற்றும், ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை ஆகும்.
மேலும் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசும் பரிசீலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில்.
வரும் 31ம் தேதி வியாழனன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் (நவ.1) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வரும் வாரயிறுதி நாட்களான சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்