Breaking News

அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர் - 4 பேர் உயிரிழப்பு பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர் - 4 பேர் உயிரிழப்பு பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வானொலி கோபுரத்தில் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

இதையடுத்து அந்த ஹெலிகாப்டர், அங்கிருந்த உயர்மட்ட செல்போன் கோபுரம் மீது வேகமாக சென்று மோதியதில் தரையில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இதையடுத்து உயிரிழந்தவா்கள் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டது பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் பரவி வருகிறது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1848548997876879833

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback