Breaking News

அனுபம்கேர் படத்துடன் ரூ.500 கள்ளநோட்டுகள்! வியாபாரியை ஏமாற்றி 2 கிலோ தங்கத்தை எடுத்துச்சென்ற மர்ம நபர்கள் Actor Anupam Kher's Picture Found on Fake ₹500 Notes

அட்மின் மீடியா
0

அனுபம்கேர் படத்துடன் ரூ.500 கள்ளநோட்டுகள்! வியாபாரியை ஏமாற்றி 2 கிலோ தங்கத்தை எடுத்துச்சென்ற மர்ம நபர்கள் Actor Anupam Kher's Picture Found on Fake ₹500 Notes

 

Actor Anupam Kher's Picture Found on Fake ₹500 Notes

குஜராத்தில் பிரபல தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரி மெஹூல் தக்கர் என்பவரிடம் 2 கிலோவுக்கு மேல் தங்கம் தேவைப்படுகிறது என ஒருவர் கேட்டுள்ளார்.

அதனை நம்பி நகைக்கடைக்காரரும் ஒப்புகொண்டுள்ளார் மேலும் வங்கி மூலம் பணத்தை தரமுடியாது எனவும் ரொக்கமாக ரூ.1.3 கோடியை வழங்கியுள்ளார்.

அதில் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 26 கட்டுகளை அந்த நபர்கள் ஜோஷியிடம் கொடுத்துவிட்டு இயந்திரத்தைப் பயன்படுத்தி பணத்தை எண்ணும்படி கூறியுள்ளார்கள், மேலும் மீதமுள்ள ரூ.30 லட்சத்தை எடுக்கச் செல்வதாகக் கூறிவிட்டு அந்த 2 நபர்களும் நகையை எடுத்து சென்றுள்ளனர். 

நகைக்கடை ஊழியர்கள் பணத்தை எண்ணுவதற்க்கு எடுத்தபோது அதில் மகாத்மா காந்திக்குப் பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் முகத்தைக் கொண்ட படமும், 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' என்பதற்குப் பதிலாக 'ரிசோல் பேங்க் ஆஃப் இந்தியா' என்றும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடை ஊழியர்களும் உரிமையாளரும் அதிர்ந்தனர். இந்த மோசடியை உணர்ந்த நேரத்தில் அந்த நபர்கள் தங்கத்துடன் தப்பி ஓடிவிட்டனர். 

இதுதொடர்பாக, கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, நவரங்புரா காவல் நிலையத்தில் தங்க வியாபாரியான மெகுல் தக்கர் என்பவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

தற்போது இந்த கள்ள ரூபாய் நோட்டு படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுபம் கெர் 500 ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்கு பதிலாக என் படம் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்

கள்ள நோட்டு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1841039274818343213

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback