Breaking News

துர்கா பூஜை, தீபாவளி மற்றும் ஆயுத பூஜை 6556 சிறப்பு ரயில்கள் இயக்கம் தென்னக ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை துர்கா பூஜை, தீபாவளி மற்றும் ஆயுத பூஜையின் போது பயணிகளின் சுமூகமான பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே 6556 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது

தீபாவளி, துா்கா பூஜை, சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு ரயில்வே வாரியம் 6,556 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 6,556 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருவனந்தபுரம், மங்களூரு, பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 

அதுபோல், தென்மாநிலங்களில் இருந்து பிகாா், உத்தர பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.தெற்கு ரயில்வேயில் இதுவரை (அக்.8) 44 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் 394 முறை இயக்கப்படும். கடந்த ஆண்டு 21 ரயில்கள் 78 முறை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கொச்சுவேலி - நிஜாமுதின், சென்னை - சந்திரகாச்சி, தாம்பரம் - ராமநாதபுரம், திருச்சி -தாம்பரம், தாம்பரம் - கோவை, திருநெல்வேலி - ஷாலிமா், ஈரோடு - சம்பல்பூா், கோவை - தன்பாத், கோவை - சென்னை எழும்பூா், சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில், மதுரை - கான்பூா், கொச்சுவேலி - மும்பை, கொல்லம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன

முன்பதிவு: தொடா்ந்து, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படையில் கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும். பயணிகள் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து காத்திருப்போா் பட்டியலுக்கு செல்வதை தவிா்க்க முன்னேரே முன்பதிவு செய்துகொள்ளலாம். ரயில் பயண அட்டவணை, வழித்தடம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் ரயில்வே வாரியத்தின் அதிகாரபூா்வ தளத்திலும், ஐஆா்சிடிசி இணையதளத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் வரும் 11-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (06190) திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06191) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே மெமூ மின்சார ரயில்இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை5.45 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும். ரேணி குண்டாவில் இருந்து மாலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback